கேட்டாளே ஒரு கேள்வி

உச்சத்தில நின்னு தினம்
===உன்ன ரசிச் சிருந்தேன்!
பக்கத்தில வர பயந்து
===பம்மி பம்மி திருஞ்சேன்!
நீ சிரிக்கும் வேளையில
===நான் சிரிச்சு கெடந்தேன்!
உன் வழியில் கண்ணவச்சு
===தின்னக் கூட மறந்தேன்!
தோழிகூட நீ நடக்க
===தோக மயில் மயங்கும்!
நூறுகத நீ அளக்க
===வேறு என்ன வெளங்கும்!
காலியான உம் மனசில்
===குடி வரத்தான் நெனச்சேன்!
வேலி போட்டு அடச்சாலும்
===வீம்பாகத் தான் நுழைவேன்!
ஆகிப்போச்சு ஆறு மாசம்
===என்னை நானே மறந்து!
மாறிப்போச்சு சாலை கொஞ்சம்
===வெயிலும் மழையும் கடந்து!
நல்லகாலம் ஒண்ணு என்னை
===எப்ப பார்க்க வருமோ!
எம்மனச நான் கொடுக்கும்
===காலம் பக்கம் வருமோ!
வந்ததுவே அந்த நாளும்
===உன் அருகில் வந்தேன்!
அந்தநொடி நீயும் பார்க்க
===கொஞ்சம் சிரிப்பு தந்தேன்!
ஒரேஒரு கேள்வி நீயும்
===என்னைப் பார்த்து கேட்ட
அந்த கணம் காதடைச்சு
===மனசு வெடிச்சு விழுந்தேன்!
அந்த கேள்வி:
...என்ன அண்ணா!
...என் ப்ரண்டு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கியாம்...
... நான் வேணா ஏதாவது உதவி செய்யவாண்ணா?