கதை அளத்தல்

பக்கத்தில் வீடு கட்ட வானம் தோண்டியபோது பெரிய குவளையை கண்டெடுத்தார்கள் அதற்கு முதுமக்கள் தாழி என்று பெயர், அது பற்றி விவரம் அறிய கேட்ட போது வந்து விழுந்த தகவல்கள் .

அந்த காலத்துல எல்லாரும் ஆரோக்கியமா இருந்தாங்க அதனால யாரும் அவ்வளவு எளிதில் சாக மாட்டாங்க, ரொம்ப காலம் வாழ்ந்திட்டோம் இனிமேல் என்ன இருக்கு என்று நினைத்தவர்கள்.. அவர்கள் உயரத்திற்கு ஏற்ப பெரிய குடுவை செய்யச்சொல்லி அதுக்குள்ள உக்காந்துகிட்டு புதைக்க சொல்லிவிடுவார்கள்.. ஒரு கிளியாஞ்சட்டியில் கொஞ்சூண்டு வேர்கடலை போடசொல்லி கேட்டு வாங்கிக்கொள்வார்கள், அந்த வேர்கடலையை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து குறுகி குறுகி குறுகி போயி கிளியாஞ்சட்டியில் போயி படுத்துக்கொள்வார்கள், அதுக்கு அப்பறமா கடவுள் அவங்களை வேறு இடத்துக்கு கூட்டிட்டு போய் விட்டுவிடுவார் அங்க எல்லாருமே ஒரு இன்ச் அளவு தான் இருப்பாங்க.. இந்த தாழி கண்டெடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு மறுபிறப்பு உண்டென்பது ஐதீகம்.

இன்னும் கொஞ்சம் தீவிரமாக ஆராய்ந்தால் ஒரு ஃபேன்டசி ஸ்டோரியே செய்யலாம் போல!.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - மீனம்மா (2-Oct-15, 12:00 am)
பார்வை : 158

மேலே