நீ என்னை வெறுத்தபோதும்..

அன்பே!
நீ என்னை வெறுத்தபோதும்..

காற்றாய் வந்து
உனக்குள் வாழ்வேன்..

நீராய் வந்து
உன் குருதியில் கலப்பேன்..

நிலமாய் இருந்து
உன்னை சுமப்பேன்..

வானமாய் இருந்து
உனக்கு குடை பிடிப்பேன்..

நெருப்பாய் இருந்து
என்மீது நீ கொண்ட வெறுப்பை எரிப்பேன்..

எழுதியவர் : இளைய பாரதி (31-May-11, 8:52 pm)
பார்வை : 916

மேலே