காதல் தேடி

வீசும் வெளிச்சம் நன்றாய் வீச-அது
என்னிடம் வரவே மறுக்கிறது.
வித்தை வீசும் நிலவின் வெளிச்சம்
என் கண்ணை மட்டும் பறிக்கிறது!!

காதல் மோகம் நெஞ்சில் மோத
கனவில் பாடுகிறேன் கீதங்கள்.
காதல் கொள்ள பெண்ணை தேடி
களைத்து போனேன் பாருங்கள்.

இடங்கள் விட்டு இடங்கள் போய்
என் காதல் தேவியை தேடிய போது
இடர்கள் இல்லா காதல் வேண்டி
என் நெஞ்சை கொடுத்தேன்
மங்கையர் மீது!!

அடிக்கும்அதிஷ்டம் எனக்கு மட்டும்
பெண்ணின் காதலில் வீசவில்லை.
அடித்து பார்த்தும் என் வாழ்வில்
இன்னும்காதல் கதவு திறக்கவில்லை!

கனவில் மோதிய கண்ணீர் கடல்கள்
என் நெஞ்சை நனைத்து செல்கிறது!
காதல் இல்லா கனவும் கூட
வெறும் பாலைவனமாய் இருக்கிறது!

காதல் என்றால் பெண்ணின் அன்பு
என்றே நெஞ்சம் எண்ணியது.
காமக் கடலில் காதல் என்பது
வெறும் கரை தான் இன்று புரிகிறது!!

காதல் ஜோடிகள் இங்கே இருந்தால்
இஃது ஒரு கேள்வியை கேளுங்கள்!?
காதல் கலப்பில் காமம் வருவது
சுகத்தில் மறையும் மாயங்கள்!
காமம் இல்லா காதல் என்பது
அன்பின் வழியில் தெய்வங்கள்!
காமம் தவித்து காதல் பெண்கள்
எங்கே இருந்தால் சொல்லுங்கள்!?
காதல் தேடி அலையும் என்னிடம்
நீங்கள் சேர்த்தால்.ஓ!!நன்றிகள்!

எழுதியவர் : (3-Oct-15, 9:19 am)
Tanglish : kaadhal thedi
பார்வை : 108

மேலே