திருநங்கையின் மனசு

திருநங்கையின் மனசு.💔
"""""""""""""""""""""""""""""""""""""
உங்க...
ஆசையில,
நான் பிறந்தேன்...!

என்...
ஆசைய,
யாரும் கேட்கல...!!

எனக்கென்ன தெரியும்...!
நான் இன்னாருன்னு...!!
இப்படிதான் வளர்வேன்னு...!!!

அஞ்சு வயசுல...
ஆடையில்லாம அலைஞ்சிருக்கேன்,
தெருவெல்லாம்...!

அப்பகூட தெரியல...
நான் இன்னாருன்னு,
ஊரார்க்கு...!!

இப்ப தெரிஞ்சு போச்சாம்...!
எல்லோர்க்கும்...!!

போன வருசம்,
எங்க ஊர்ல திருவிழா...

ஆண்களெல்லாம்...
பெண் வேசமிட்டு ஆடுவோம்...!

அப்பத்தான்...
ஊர் திருஷ்ட்டி கழியுமாம்...!
அதுதான்
சாமிக்கும் பிடிக்குமாம்...!!

ஆடியபின்...
ஆடையை கலைக்க மனமின்றி,
அமர்ந்தேன் கட்டிலில்...!

வீட்டு திண்ணையிலிருந்து...
அப்பாவின் குரல்...!
"டேய் பொம்பள வேசத்த...
கலச்சிட்டு,
வேட்டி சட்டைய கட்டிட்டுவாடா...
கோவிலுக்கு போகணும்"

என் தந்தைக்கு...
எப்படி புரியவைப்பேன்...
இனி நான் உடுத்தும்,
ஆடைதான்...
வேசம் என்று...!!!


இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (5-Oct-15, 2:11 pm)
பார்வை : 220

மேலே