தனிமையின் தலையணையில்-ஆன்ஸ்ராஜ்

இனிய இரவிது!
தமையனின் தாலாட்டு கேட்கவில்லை;
அவன் தரும் அன்பு முத்தமும் இல்லை இன்று;
அண்ணன் மடியில் உறங்கிய எனக்கு ,
தலையணை பாறை போலானது இவ்விரவில்...

என்றும் இன்பம் தரும் இரவு,
இன்று இனிக்க மறந்து நிற்கிறது;
நினைவுகளைச் சுவைக்க வைத்த இரவு
இன்று நினைவுகளைச் சுமக்க வைக்கிறது...

வெண்மதியே விரைந்திடச் சொல்
என் அண்ணனை...
கார்முகிலென வந்திடச் சொல்
இத்தங்கையிடம்...
தனிமையின் தலையணையில்
உறங்க முயற்சிக்கிறேன்!

எழுதியவர் : பபியோலா (5-Oct-15, 12:28 pm)
பார்வை : 157

மேலே