வேதியியலின் உயிரியல்-ஆன்ஸ்ராஜ்
தொலைவிலிருக்கும்
வானத்தையும்
வசப்படுத்தச் சொல்லித்தந்தவன்...
தொலைந்த என்னைத்
தேடிக் கண்டடையக்
கற்றுக்கொடுத்தவன்...
தோல்விகளின் வலியில்
வாழச் சொல்லித்தந்தவன்...
வலிகளின் வெற்றியைக்
கற்றுக் கொடுத்தவன்...
முட்கள் நிறைந்த வழியை
மொட்டுக்கள் நிறைந்த
பூவனம் ஆக்கித்தந்தவன்...
சமநிலை வினையில் வாழ்வைச்
சமைத்திட வைத்தவன்...
வெறுப்புகள் நிறைந்த நேரமதில்-என்
வினையூக்கியவன்...
வாழ்க்கை வினை வழிமுறையில்
விளைபொருளை எனக்குச்
சாதகமாக்கியவன்...
மொத்தத்தில் என்
வேதியியலின் உயிரியல்
என் அண்ணன்!