ஒருமுறை பிறப்பே நம்பு ---- அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

கருவறைப் பயணம் தன்னில்
------------ கனவது மிகுந்து நிற்கும் .
திருவடிச் சேர்வை காண
----------- தினமுனை நினைத்தே ஏங்கும்.
வருவதும் கடவுள் தந்த
--------- வரமது வணங்கும் வாழ்க்கை .
ஒருமுறை பிறப்பே நம்பு .
----------- ஒதுங்கியும் மரணம் வீழ்க .


( விளம் + மா + தேமா
விளம் + மா + தேமா )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Oct-15, 11:15 am)
பார்வை : 89

மேலே