சுதந்திர பட்டாளம்

வெண்மை பொருந்திய குளிர் மேகங்களே

காலை பொழுதில் உங்கள் மிளிரும் புண்ணகை ,என் மௌனத்தின் அழகை நீள தொடுத்து கொண்டே போகிறது....

இசைவான காற்று உங்கள் கீற்றை இழுத்து கொண்டே போகிறது

புதிய வரவு மேகங்கள் கசிந்தென்னை மிருகேற்றும்

அந்த குளிர்ந்த காற்றில் என் குருதியின் சூடு சற்று தனிந்தே ஒழுகும்

உமக்கேது வசிப்பிடம்,நீர் சுதந்திர பறவைகள்

உமக்கேது கல்வி சாலை,நீங்கள் புண்ணகையை பொழியும் வெண்ணிற சோலை

இருக்கங்கள் ஆட்கொண்டால்,அதை நீராய் உமிழ்ந்து தள்ளும் வரம் உங்களுக்கு

செம்மறி ஆட்டு கூட்டமாய் உறவுகள்,அதோடு ஓடி விளையாடும் தருணங்கள் பல்கோடி

நாங்கள் தொடவொண்ணா உயரம் நீங்கள்,

உங்கள் இன்ப துளிகளில் நாங்கள்

நாங்கள் அறிந்த அமிர்த சுரப்பி நீங்களே

உங்கள் நிழலோடு போகும் வாழ்வில் எங்களுக்கு என்ன சோகம்

எழுதியவர் : சிவசங்கர்.சி (6-Oct-15, 8:56 pm)
பார்வை : 98

மேலே