மனங்கள் துளிர்க்கட்டும்
ஈரமான இலைகளில்
இதமான காற்றையும்
பிராண வாயுவையும்
ஈரலைக் காக்க
இதயத்தைப் பேண
பிரதிபலன் பாராது
பகிர்ந்தாய்!
இதயங்களில் ஈரமில்லாது
போனதால்
இங்கே
மரங்கள் மரித்து
கொண்டிருக்கின்றன
இன்னும் இதயங்களில்
நல்லவை துளிர்விடவில்லை
தளிர்கள் தழைக்க
மனங்கள் துளிர்க்கட்டும்!