பிறக்கும் நாளுக்காய்
எத்தனையோ இல்லங்களுக்கு
காவலாய் நானிருந்தாலும்
அத்தனை இல்லத்தோரும்
இணைந்து கூட என்
ஓருயிரைக் காக்க மனமில்லை!
இல்லங்கள் முழுக்க
இடம்பெற்றாலும்
அது என் அழிவே!
ஒரு ஓரத்தில்
இடம் தந்து வளர்த்திடுங்கள்!
இறந்து போன நினைவுகள்
இடம் பெயர்தலில் தேவையில்லை!
பிறந்த நாளுக்காக அல்ல
பிறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறேன்!