ஒரு காளை இடத்தில் உழவன் பேசுவது
இந்த பாரு என் செல்ல காள
எங்க பாத்தாலும் கடன் தொல்ல
இந்த நாட்டுல உழவன பொறந்து
இன்னும் என்னென்ன கஷ்டம் தாங்கனுமோ
அடுக்கு மாடி கட்டடம் கட்டதான்
உழவு நிலத்த எல்லாம் பரிச்சுகிடாங்க
அடிமையா தான் நம்மள நடதிடுறாங்க
ஆனா சோறு திங்கும் போது மட்டும் நெனச்சுக்குறாங்க
உயிர கொடுத்து தானே பயிரெல்லாம் விளைக்குறோம்
ஊருக்கெல்லாம் சோறு போட்டு அழகு பாக்குறோம். இருந்தும்
கயிறுல தான் நம்ம வாழ்க்க முடிஞ்சு போகுது
நம்ம உழைப்பெல்லாம் கருப்பு பணமா தான் போகுது
ஏர் புடுச்ச கைல இப்போ கயிறு புடுச்சு நிக்குறேன்
ஏன் இந்த சோதனைன்னு சாமியத்தான் கேக்குறேன்
சோறு போடும் உழவனெல்லம் உயிர விட்ட அப்பால
சாதி சனம் வாழ்ந்திடுமா? சாமி பதில் சொல்லனும்மா...