நாளை வரலாம்
அன்பாய் நோக்கு,
ஆதரவாய் பேசு,
இயன்றதை செய்,
ஈயென சுற்று,
உருகி,உருகி கவிதை எழுது,
ஊண்,உறக்கமின்றி தவி,
என்னைப் பாரென ஏங்கு,
ஏளனமாய்த்தான் பார்ப்பாள்,
ஐந்தாறு வருடங்களானாலும் அலை,
ஒத்தையடி பாதை வழி வருகையிலே,
ஓடியொழிஞ்சாலும் உன்னோடுதான்,
ஔஅளவு காதலென உண்மை சொல்,
ஃக்கும் என்றாலும்....பொறு....
நாளை வரலாம் நல்லபதில்....