கல்லறைக்குக் காணிக்கை

" கல்லறைக்குக் காணிக்கை "

நீல வண்ண வானமதில் - வெண்
நிலவு காயும் நேரமதில்
நின்றிருந்த இடங்களெல்லாம்
நிழல் போலே தோன்றுதடி

நினைந்துருகும் என் மனதை
நீக்கி வீட்டுச் சென்றனையோ
நீயும் வந்து சேராயோ - அமாவசையில் நிலவாய்
நீயும் வந்து சேராயோ

இதயமெனும் ஏட்டினிலே
இளமையெனும் எழுத்தாணியால்
இன்பமெனும் கவிதை தனை - அற்ப
இறைவனவன் எழுதி வைத்தான்

எழுதி வைத்த இறைவனுக்கும்
எண்ணமது இல்லையடி
ஏறெடுத்துப் பார்பதற்கும்
எண்ணமது இல்லையடி

எத்தனை நாள் உன்னிடத்தில்
என்னுயிரைக் கொடுத்திருந்தேன்
என்னை மட்டும் விட்டு விட்டு
எங்கு நீ சென்றனையோ

என்னிடத்தில் உன்னுயிரை
ஏகாந்தமாய் தந்த இறை
என் நினைவை உன்னிடத்தில்
எகக்காளமாய் பிரித்திடல் முறையோ

கருணையற்ற கடவுளவன்
காத்திருப்பாய் என்றுரைத்தான்
காலமெல்லாம் காத்திருந்தேன் - அந்தோ உன்னை
காலதேவனாம் கடவுளவன் பிரித்து விட்டான்

கண்ணீரால் கவிதைதனில்
கற்பு வாழ்க்கைதனை எழுதுகிறேன் - நிலவாம்
அந்த கணிகையவள் உறங்கும்
இந்த கல்லறைக்குக் காணிக்கை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Oct-15, 9:02 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 77

மேலே