சப்தமில்லை சப்தமில்லை
எனது ஜனனத்தின் போது எழுந்த
எனது கத்தல்களில்
சத்தம் அதிகமில்லை என்றார்களாம்..
என் அம்மா சொன்னது..
ஆம்..
அன்பே..
உன் அன்புக்கு முன்
ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி
அமைதியாய் உன்னை ரசிக்கும்
தேவை வரக் கூடும் என்றோ என்னவோ.. ..
அப்போதிருந்தே பழகி வந்திருக்கிறேன்
போலிருக்கிறது ..
வேறு ஒன்றுமில்லை!