குறும்பாக்கள் - 04

" குறும்பாக்கள் - 04 "

1. இருள் படர்ந்த வாழ்வில்
அருள் பரப்பும் உறவும் மருள் நீக்கும் தொடர்பும் - எவர்க்கும்
அஸ்தமனத்தில் ஓர் உதயம்

2. சொல்பவன் சொல்வான் கெடுப்பவன் கெடுப்பான் - எதையும்
வெல்பவன் அவனே மனிதனடா - என்றும்
வல்லவன் அவனே புனிதனடா - எங்கும்
நல்லவன் அவனே நரனடா

3. இருக்கும் ஒன்றுக்குத் தான்
எத்தனை பேர் போட்டி
ஐம் புலன்கள் / ஐம் பெரும் பூதங்கள்

4. நானோ தலைகீழ்
தென்னை மரமோ நேர்
கடவுள்த் தேங்காய்...பழமாய் மாறியபாடில்லை

5. அடி கொடுப்பதும் வாங்குவதும்
தர்மம் தான் போலிருக்கிறது
ஆவிகளின்(உயிர்) அட்டகாசம்

6. அன்பு
யூகம் அல்ல
அர்ப்பணிப்பு

7. செத்த பிறைக்கு
இரு பெயர்கள்
அமாவாசை பவுர்ணமி

8. அனுபவத்தைப் படிக்கிறேன்...தேர்வு எழுத அல்ல...
அறிவை ஆய்வு செய்கிறேன்...அழிப்பதற்கு அல்ல
எதார்த்தம்

9. நீ உன்னை ஊமையாக உணர்ந்தால்
என்னை எழுதக் கற்றுக் கொள்வாய்
காதல்

10. உனக்குத் தான் எல்லாம் தெரியும்/அத்துப்படி என்று
உளறி உறுமும் மனசாட்சியே எதையும்
அமுக்கி வாசித்தால் உன் மரியாதை பிழைக்கும்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Oct-15, 8:41 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 54

மேலே