வியர்வை காலங்கள்

குளிர்காலங்களில் வியர்வை
வெளிநாடு சென்றிருக்கும்....
மழைகாலங்களில் மழை ஓய்ந்ததும்
மேனியிலிருந்து எட்டிப்பார்க்கும்....
கோடைகாலங்களில் எப்போதுமே
அதன் ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கும்....
கூட்ட நெரிசலான இடங்கள் எங்கு சென்றாலும்
அதன் வாசனையை உலக மயமாக்கிக்கொண்டிருக்கும்..
பணம் கொண்ட பகட்டாளிக்கும்
குளிர்சாதன அறையில் வீற்றிருக்கும் முதலாளிக்கும்
இது தனது தரிசனத்தை அளிப்பதில்லை...
உழைப்பாளிக்கும்
விளையாட்டு வீரனுக்கும்
எப்போதும் உறுதுணையாய நின்று
அவனில் முன்னேற்றம் காண வழிவகுக்கும்...
வியர்வை போடும் கோலங்கள்
வாய்க்கப் பெற்றவர்கள்
நாளாக நாளாக வியர்வை காலங்களை
மறக்கவும் வாய்ப்பு உண்டு...