ஆசை ஆசையாய் வைரமுத்து சிறுகதைகள்

கர்வமும் கண்டேன், கவித்துவமும் கண்டேன்
தான் கண்ட நிழலை உயிராக்கி தந்த படைப்பையும் கண்டேன்
சின்ன சின்ன கவிதைகளின் ஊடே வரும் சிற்றிலக்கியம் உரைநடையாம்...
சுவை உள்ள தமிழை எடுத்துக்காட்டி சுவைத்து கொண்டிருக்கும் கலைஞர்
இந்த சுவை இப்படி அந்த சுவை அப்படி என்று நடித்து கட்டும் கலை ஞானி
வர்ணித்து வர்ணித்து சுவைக்க நாவினில் ஊரும் எச்சிலை போல வாசிக்க ஆர்வமூட்டும் பேராசிரியை
இவர்கள் புகழ புகழ என தான் இருக்கிறது பார்த்து விடுவோம் என்று வாங்கி விட்டேன்
சிறுகதைகள் புத்தகத்தை ...
வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தை...

கருப்பு உருவத்தின் நீல கையொப்பம் வாங்க வரிசையில் காத்தேன்.
யாரோ வாசகன் என நினைத்திருப்பாரோ!
வாங்கி ஒப்பமிட்டு கொடுத்து விட்டார், பின் வரும் வாசகரை பார்த்துவிட்டு
என் முகத்தை கூட பார்க்காமல்....

நான் வாசிக்க போகும் முதல் வைரமுத்துவின் புத்தகம்
வைரமுத்துவின் 17வது புத்தகம்...

அப்படி என்ன மதுவை கலந்து வைத்துள்ளான் இந்த பெரிய கவிஞன் எழுத்துகளோடு...
நானும் சுவைத்து பார்க்கிறேன்...
ஆசை ஆசையாய்...

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (11-Oct-15, 3:17 pm)
பார்வை : 609

மேலே