எழுத்தாளன்
எழுத்து என்பது சம உரிமை கொண்டது
அதை எழுதும் பேனா முனையில்
தன் எண்ணங்களை திணிக்கிறான் மனிதன்
கட்டுரையோ கவிதையோ கடிதமோ எதுவாகிலும்
சுதந்திரம் என்ற போர்வைக்குள் அடக்கி விடுகிறான்
அடுத்தவன் அதைப் பார்த்து பெருமிதம் அடையவும்
புளகாங்கிதம் கொள்ளவும்
அதைப் படித்துப் பயன் பெறவும்
வேண்டும் என்ற நல்லெண்ணம் அவன் மனதில்
இழையோடிக் கொண்டே இருக்கும்
அடுத்தவரை பாதிக்கும் எண்ணம்
ஒரு எழுத்தாளனின் மனதில் எழவே எழாது, எழவும் கூடாது
அதை மீறி எழுதும் போது தான்
அடுத்தவன் சுதந்திரம் பாதிக்கப் படுகிறது
நிச்சமாக நல்ல எழுத்தாளனுக்கு
இத்தகைய எண்ணங்கள் .தலை தூக்காது
ஏதோ என்னமோ எப்படியோ எழுதுவது ஒருவனின் சுதந்திரம் .
ஆனால் அது எழுத்தை ஆளும்
நன்னெறியைப் போதிக்கும் எழுத்தாளனுக்கு அல்ல .
தன் எழுத்தால் தரம் குன்றா தங்க மனிதனை
உருவாக்கும் எழுத்து வள்ளலே கவிஞன்
எழுத எழுத கூர்மையாகும்
அவன் எண்ணங்களும் எழுத்துக்களும்
நல்ல எழுத்துகள் மனிதனின்
தலை எழுத்தையும் மாற்றி விடும்
உலகமே அவன் பார்வைக்குள்
அதன் உயர்வே அவன் எழுத்துக்குள்