வரமெனக் கொள்வோமே

விளம்பர மில்லாப் பொருட்களும் பெரிதாய்
***விற்பனை யாவதுண்டோ ?
களம்பல கண்ட மன்னனும் போரில்
***கடைசியில் தோற்பதுண்டோ ?
குளத்திடை சேற்றில் பூப்பினும் கமலம்
***கோயிலில் மறுப்பதுண்டோ ?
வளமிகு பாக்கள் வழங்கிடும் எழுத்தை
***வரமெனக் கொள்வோமே !


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )


( விளம் + மா +விளம் +மா
விளம் + காய் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Oct-15, 11:26 pm)
பார்வை : 55

மேலே