நீதி கேட்கவா

பாடல் ஒலிக்கிறது

நீதி கேட்கவா....
நீதி கேட்கவா....

மக்கள் வெள்ளத்தின் நடுவே கைகூப்பி வணங்கியபடி அத்தனை பற்களும் தெரிய சிரிக்கிறார் ஸ்டாலின்.

தொண்டர்களின் வீடுகளில் தங்குகிறார், தெருமுனை டீக்கடையில் தேனீர் அருந்துகிறார், கூட்டம் கூட்டி பேசுகிறார், நடனமாடுகிறார், பள்ளிபிள்ளைகள் மத்தியில் பேசுகிறார், வயதான பாட்டிகளிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். ஆட்டோகாரனோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். எல்லாம் ஓகேதான்.

ஒன்றே ஒன்றுதான் எனக்கு தோன்றியது, மதுக்கடைகளை கொண்டுவந்தவர்களே எப்படி ஒழிக்க முடியும்? ஈழப் போரை வேடிக்கைப் பார்த்தவர்களே எப்படி நீதி கேட்க முடியும்? ஒருவேளை நல்லது நடந்தால் வரவேற்கத்தான் போகிறோம்.

இப்போது எனக்குள் மீண்டும் அந்த பாடல் ஒளிக்கிறது

நீதி கேட்கவா....
நீதி கேட்கவா....

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (14-Oct-15, 11:27 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 371

மேலே