காதலின் குறியீடுகள்
இரு காலி கோப்பைகளும்
சில சிகரெட் துண்டுகளும்
இடைவெளி மெளனங்களும்
இரைச்சலான மனமும் ….
காதலை சொன்ன இடத்தின் குறியீடுகளும்
காதலை கொன்ன இடத்தின் குறியீடுகளும்
சரியாய் இருக்கின்றன
அலையாடும் பிம்பங்களென நாம்
குட் லக் …
போய் வா
மெல்ல நகர்ந்தாய்
பனிச் சாரல் நுழைய வழிவிட்டு….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
