அனாதையாய் ஆனோம்

விழியில் வடியும் உதிரம்
தாய் மண்ணினின் மீது சொரியும்
வலியோடு வழிந்தோடும் கனவுகள்
தெளிவோடு நாம் களமாடிய வாழ்வுகள்
பச்சை வயலெல்லாம்
மிச்சமில்லை
பகை தந்த பரிசுக்கு பொன்னாடை போர்க்கவில்லை
அயல் நாட்டானை நம்பி
அனாதையாய் ஆனோம்
பல நாட்டை நம்பி இல்லது போனோம்
நாமே நாமாழ அணிவகுத்தோம்
நன்றி கேட்டோரின் நயவேலையால் அணியிழந்தோம்
உறுதியற்ற மனிதன் எவனோ
பகையின் காலின் செருப்பு
வீரியமாய் எழுந்து வருவவன் எவனோ
அவனே எதிரியை எரிக்கும் நெருப்பு

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (14-Oct-15, 9:38 pm)
பார்வை : 84

மேலே