கடமை அழைக்கிறது எம் இனமே

இழப்பதற்கு எதுவுமில்லையென
இருப்பதை இழந்துவிடாதே
எடுப்பதற்கு இருக்கின்ற உறுதியில்
ஓய்ந்து விடாதே

அழுது கொண்டு வாழ்வதற்கு
வெட்கமில்லையா
சூளு கொண்டு வாழ்ந்த
எம் வீர பூமியில்லையா

உலக நீதிபான்கள்
உரிமை தந்திடுவாரென்று
உறங்கி விடாதே
அடுத்தவன் அரவணைப்பை
நம்பியிருந்தால்
நஞ்சும் ,ஆயுதமும்
அணிந்திருக்க வேண்டியதில்லை

மார்பு தட்டி சென்றவர்கள்
மண்ணுக்குள் உறங்கவில்லை
கண்ணுக்குளே வாழ்கிறார்கள்

மங்கையென்று,தங்கையென்றும்
மதித்தவரெல்லாம்
மந்தைகளினால் மிதிக்கப்பட்டு
அழிக்கப்படுகின்றார்கள்
புதையுண்டு போனது சுதந்திரம்
புதைக்க வில்லை அபிலாசைகளை

மீட்பு பணிக்காக வேண்டி நிற்கின்றார்கள்
விரையமாக்காது விரைந்து புறப்படுங்கள்
செங்களம் நோக்கி
இது எம் தார்மீகக்கடமை

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (14-Oct-15, 10:21 pm)
பார்வை : 150

மேலே