ஏவாளின் முத்தம்

ஏவாளின் முத்தம்

தீ படர்ந்த‌
கட்டிலறையில்
திட்டுத்திட்டாய்
பனிக்கட்டி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
உதிர்க்க வந்தவனே!!

பிணங்களின்
குரல்வளையில்
என் பெயர் மாற்றம்
புரிந்தவனே!!!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍உயிரின்
ஆழத்தில் சுரக்கும்
இன்பம் அகழும்
சுரங்கமறுப்பவனே!

இத்தனையாண்டும்
எங்கிருந்தாய்!!???

நரக நாட்களின்
நக கீறலில்
என் உயிர் கிழிந்த‌
சேதி கேள்!!

காலப்போக்கில்
எனை
கணெக்கெடுக்கா
தென்றலில்!!

கழிவு
பார்வையெங்கும்
கால்பிடித்திழுத்த‌
அவமானத்தில்!!

எச்சில் உமிழாமலே
மனம் உடைத்த‌
உறவுகளின்
சிறப்பு நிகழ்வுகளில்!!

நொடிக்கொரு கணம்
நடித்த வேடத்தில்
இதயம் வெடித்து
இறந்தேன்!!

அழுத கண்ணீரே
ஆண்டுதோறும்
வயதை அரிக்க!!
அக்காள் இருக்க‌
தங்கைக்கு
தாலியெதற்கு??

யார் யாரோ
கேள்வியின்
வேள்வியில்
தங்கைக்கும் சேர்த்தே
பங்கெடுத்தேன்!!!

கால மிருகம்
என் நாற்பதாண்டை
கடவாயில் இட்டு
கடித்து முடித்த‌
போதுதான்!
முழு இளமையையும்
அரை முதுமையையும்
அருந்த நீ
வந்திருக்கிறாய்!!!

உயிர் சுடரில்
பெண்மையின்
பாதி எடை
எரிந்த பின்னர்தான்
மீதியை அணைக்க‌
வந்திருக்கிறாய்!!

தப்பித்தாள் இவளென‌
இரங்கள் விழி
ஒப்பித்து
இன்னோர் பெண்மை
அண்மிக்கிறது!!
முதிர்கன்னி பட்டம்.....

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இன்று ஞாயிற்று
கிழமையல்லவா!!??
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍வா போய்வருவோம்!
உன் மனைவியின்
கல்லறைக்கு!!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (14-Oct-15, 10:43 pm)
சேர்த்தது : அர்த்தனன்
Tanglish : yevaalin mutham
பார்வை : 62

மேலே