இயற்கைக்கு ஏமாற்றம்

அந்தி நீல வானம் உனக்காக
ஆகாய விண்மீன்கள் உனக்காக

இரவில் காயும் வெண்ணிலா உனக்காக
ஈர பனித்துளி ரோஜா உனக்காக

உளியில் முளைத்த சிற்பங்கள் உனக்காக
ஊர்ந்து செல்லும் நதிகள் உனக்காக

எல்லாமே உனக்காக காத்திருந்தாலும்
ஏனிந்த ஏமாற்றம் அத்தனைக்கும்

ஐம்பெரும் பூதங்களும் அதிசயமே ஆனாலும்

ஒன்றல்ல இரண்டல்ல அதிசயங்கள்
ஓராயிரம் நித்தம் நித்தம் உன்னை வியக்க வைப்பவள் அவள் தானே !

எழுதியவர் : (16-Oct-15, 12:15 am)
பார்வை : 122

மேலே