காத்திருக்கிறேன்

இமை அசைக்காது
எதிர் நோக்கிய சுடும்
விழிப்பார்வையில்
எட்டுப்புள்ளி கோலம்
பட்டுப்பூச்சி
வானவில்
எதிலுமே லயப்படாது மனசெல்லாம்...
கூகிளில் தேடியும்
கிடைக்காத
கூண்டுக்கிளி அவள்,
எப்போது
வெளி வருவாளோ
எருமை மாடாய்
காத்திருக்கிறேன்.