நடிகர் சங்க நாடகம்
வேஷம் கட்டும் கூத்தாடிகளே
கோஷம் போடும் காத்தாடிகளே
கோஷ்ட்டி மோதல் என்றப்பெயரில்
முஷ்ட்டி உயர்த்தும் கைத்தடிகளே!
ஊரூ ரெண்டுப்பட்டால்
கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்..!
கூத்தாடிகளே ரெண்டுப்பட்டுக்கிடந்தால்
ஊர்க்காரர்களுக்கு ஏது கொண்டாட்டம்..?
கூத்தாடிகளின் பைத்தியக்கார செயலுக்கு
பலியாவது பரிதாபத்துக்குரிய ரசிகர்களே..!
உறுப்பினர்களை உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டு
குளிர்காய்கின்றன ஒட்டுமொத்த மீடீயாக்கள்!
நீங்கள்
நீயா நானா விளையாட
நடிகர் சங்கத் தேர்தலென்ன
நாட்டை ஆளுகின்ற தேர்தலா..?
ஒன்றுக்கும் உதவாத
ஒப்புக்கு சப்பான் தேர்தலுக்காக
உங்களுக்குள்
இத்தனை அக்கப்போரா…?
ஜனநாயக நாட்டில் தேர்தலென்பது
பணநாயகத்தோடு சம்பந்தப்பட்டது..!
இங்கே - மனித நேயம் கூட
“மணி” இருந்தால்தான் மதிக்கப்படுகிறது !
இதுவரை
வெக்கப்போரில்
ஒளிந்துக் கிடந்தவர்களெல்லாம்
வெட்கமில்லாமல் வெளியேறி,
வார்த்தைப்போரில்
வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்
அவர் அவர் அணிக்காக..!
இறுதியில்
வெல்லப்போவது யாராக இருந்தாலும்
எப்போதும் பாதிப்புக்குள்ளாவது
ஏமாந்து வாக்களித்த
சினிமாவின் செல்லக் குழந்தைகளான
நலிந்த கலைஞர்களின் நிலையென்னவோ
நெடுநாள்வரை நீர்க்குமிழி போலதான்..!

