மெழுகே அழகே
மெழுகே..! அழகே..!
தன்னில் -
உருகி ஒளிரும்...
மெழுகே..! - இளமை
அழகுகே..!
உன்னில் -
பெருகி வழியும்...
மென்மை..! - இலங்கும்
பெண்மை..!
கண்னில் -
காட்டும் காட்சி...
கனலே..! - காதல்
புனலே..!
மண்னில் -
துலக்கும் வதன...
ஒளியே..! - மயக்கும்
மதியே..!
என்னில் -
புலர்ந்த புதுமை...
உணர்வே..! - உறைந்த
உயிரே..!
பொன்னில் -
எழுந்த தவமாய்...
புதுமை..! - பூத்தமது
பதுமை..!

