சித்திரமே சித்திரமே

சித்திரமே சித்திரமே !
======================((

சித்திரமே சித்திரமே
சின்ன மடிசார்
பத்திரமே பத்திரமே!

சித்திரமே சித்திரமே
அணிந்தாயோ
நேத்திரமே நேத்திரமே!

சித்திரமே சித்திரமே
உன்பல் வரிசை
நித்திலமே நித்திலமே!

சித்திரமே சித்திரமே
உன் அழகு
உத்தரமே உத்தரமே!

சித்திரமே சித்திரமே
உன் மொழியால்
நான் இழந்தேன்
உத்தரமே உத்தரமே!

சித்திரமே சித்திரமே
சின்ன இதழ்
பத்திரமே பத்திரமே!

சித்திரமே சித்திரமே
நீ என்தன்
நேத்திரமே நேத்திரமே!

சித்திரமே சித்திரமே
நான் இழந்தேன்
நித்திரையே நித்திரையே!

சித்திரமே சித்திரமே
நான் உனக்கு
மித்திரனே மித்திரனே!

சித்திரமே சித்திரமே
இறைவன் எனக்கெழுதிவச்ச
பத்திரமே பத்திரமே

சித்திரமே சித்திரமே
என் இதயத்தில் அளித்தேன்
பத்திராசனமே பத்திராசனமே

சித்திரமே சித்திரமே
உன்னால் நான் அடைந்தேன்
மத்திரமே மத்திரமே.
இத்தினமே இத்தினமே!!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (17-Oct-15, 7:32 pm)
பார்வை : 100

மேலே