அசரீரி
" அசரீரி "
அசுத்தம் எது... சுத்தம் எது... என்று
அசரீரி கேட்கிறது
பேசும் வாய் அசுத்தம்
கேட்கும் காது அசுத்தம்
காணும் கண் அசுத்தம்
சுவாசிக்கும் மூக்கு அசுத்தம்
உணரும் உடல் அசுத்தம்
இவைகளை ஆட்டிப் படைக்கும்
மூளை (மலம்) அசுத்தம்
மூளை இறந்தும் இயங்கும் இதயம்(பிணம்) அசுத்தம் என்றேன்.
உடலற்ற அற்ப அசரீரியே...
சுத்தம் சொல்கிறேன் கேள்
பொத்திக்கிட்டு போவியா அங்கிட்டு...
அசரீரியா வந்துட்டாரு ஆட்டிக்கிட்டு...
சுத்தத்தைக் கேட்ட அசரீரி
சுத்தமாய் மறைந்தது