சுயநலம்

" சுயநலம் "

தமிழ் மொழியின் ஒவ்வொரு எழுத்தும்
சுயமாக(அர்த்தமாக)
சுந்தரமாக
சுதந்தரமாக நலமாய் இருப்பதால் தான்
சாவாமல் இருக்கிறது / இருக்கும் தமிழ் மொழி

இறந்தவனுக்காய் 'திவசம்' பன்னுகிற
இந்த ஊருடனோ நாம் இசைந்து வாழ !?
பிறந்தவனுக்காய் 'புனிதம்' பன்னுகிற
வந்த யாருடனோ நாம் அசைந்து வாழ !?

இரவின் சுயநலம் கண்டு
இரவியின் சுயநலம் பொறாமை கொள்வதோ நியாயம்/நீதி !?

நான் வாழ நானிலம் வாழும்
அலை வாழ கடல் வாழும்
மூளை(மலம்) வாழ முதல் வாழும்

கோழை வாழ அறிவு வீழும்
இறைவன்(அற்பன்) வாழ மனிதம் வீழும் .

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (21-Oct-15, 8:05 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : suyanalam
பார்வை : 74

மேலே