காதல்
மூன்றெழுத்தில் ஓராயிரம் அர்த்தங்கள்
கொண்டது
காதல்..
எழதபட்டு கொண்டிருக்கும் ஐந்தாவது வேதம்
காதல்
வள்ளுவரின் மூன்றாம் பாலில்
மொத்தமாய் ஆட்சி
செய்வதும்
காதல்
நீயும், நானும்
வந்து நின்ற
ஒற்றை
புள்ளி
காதல்
அன்பு என்பதை
பிரித்து பார்த்தாலும்
சேர்த்து பார்த்தாலும் பொருள் என்னவோ ..காதல்
அரிசந்திரனையும் பொய் சொல்ல வைப்பது
காதல்
பல ஆம்ஸ்ட்ராங் க்களுக்கு
நிலவை காட்டியதும்
காதல்
ஒவ்வொரு நொடியும் இறக்கவும்..
மறுநொடியே
பிறக்கவும்
செய்வதும்
காதல்
முத்தம் கற்று தந்ததும்
காதல்
நெஞ்சில பச்சை குத்த செய்வதும்
காதல்
தாஜ் மஹாலை கட்ட செய்தது
காதல்
பல தாடிக்குள்ளும்,
முந்தானை ஓரத்தில் நனைந்து இருக்கும் கண்ணீருக்குள்ளும்
ஒழிந்திருப்பதும்
காதல்
பாலைவனத்தில் பூக்கள் பூக்க செய்வதும்
காதல்
சாதியா? மதமா?
என்னவென்று கேட்பது
காதல்
உலகமே வாள் ஏந்தி வந்தாலும்
கேடயம் தூக்கி நிற்பது
காதல்
மொழி தெரியவிடினும்
மனசால்
பேசும்
காதல்
தூரமனாலும் கூடவே இருப்பது
காதல்
இரையூட்டும்
குருவியின்
அலகில்
காதல்
அவன் கொடுத்த ரோஜாவில்
காதல்
அவள் வாங்கி தந்த சட்டையில் காதல்
காற்றுக்கும் சுவாசிக்க சொல்லி தருவதும்
காதல்
பிரியும் போது
வழியும் துளி
கண்ணீரிலும்
காதல்
கட்டியணைக்கும் போது இடைவெளி குறைப்பதும்
காதல்
கூட்டத்தில்
தனிமை
காதல்
கூட்டலில் கழித்தல்
காதல்
சூரியன் வரும் போது
சிரிக்கும்
பூக்களிடம்
காதல்
ஊசி முனையில்
உலகம்
சுற்ற
அச்சாணியாம்
காதல்
காகிதம்
எல்லாம்
நிரம்பி கிடப்பதும்
காதல்
எங்கும்
காதல்
எதிலும்
காதல்..
கண்டுபிடிக்க முடியாத
காற்று
போல
உன்னை
சுற்றி
இருப்பதெல்லாம்
காதலே
காதலே
காதல்
மட்டுமே....
மஞ்சள் நிலா 🌙

