எதை நோக்கி
எதை நோக்கி ???? கட்டுரை....
_____________________________
அவசரம்! வேகம்! பரப்பரப்பு !!! பதட்டம்!!!
இவை எல்லாம் காலை விடியல் முதல் இரவு கண் இமை மூடும்வரை ,,,,
பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன்..
அவசரம், அவசரம் , அவசரம்..... காலை எழுந்து அரக்க பறக்க வாசலில் கோலம்,,, பின்பு காபி அதை நிறுத்தி நிதானமாய் நாம் ரசிக்க முடிகிறதா இல்லையே!!! அந்த காபி கையில் வைத்துக்கொண்டே காய்கறிகளை எடுக்க, பாலை காய்ச்ச என்று பல வேலைகள்.... காபியின் ருசி அம்மாவின் கையால் வாங்கி சாப்பிட்டதோடு சரி....ஆனால் ஒன்று, சமீபத்தில் முடிவெடுத்துள்ளேன். எந்த வேலையாக இருப்பின் எனக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று... ஒன்று காலை காபி நேரம் , மாலை காபி நேரம்.... பத்து நிமிடங்கள்...எனக்கே எனக்காக ....ஒதுக்குங்கள் பெண்களே சுகம் தரும் தருணம் அதுதான்... சில சமயங்களில் அதுவும் முடியாது... ஆனால் முயற்சி செய்யலாம்..
காபி முடிந்ததும் அவசர குளியல், பின்பு அவசர வணக்கம் கடவுளுக்கு , காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு , நடு நடுவில் இட்லி தோசைக்கு ஊறவைப்பது என்று வேலைகள் .... எதை விடுவது ???? இவை அனைத்தும் 8.30 குள்... பின்பு இருக்கும் 10 நிமிடங்களில் சிகை அலங்காரம், புடவை அலங்காரம் .....மாலை வரை அலுவலகத்தில்.... அங்கு உள்ள சிக்கல்கள், தொல்லைகள் இருப்பினும் சிறு இன்பங்கள்..... எல்லாவற்றையும் முடித்து மறுபடியும் மாலை, இரவு வேலைகள்......
இப்படியே, நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின, வருஷங்கள் ஓடின....... எதை நோக்கி இப்படி சுழல்கின்றோம் என்று நிதானமாய் யோசித்தால் " ஒன்றும் இல்லை" என்று தான் பதில் கிடைத்தது...
ஒன்று ஒப்புக்கொள்கிறேன்!!! அந்த காலத்தில் பெண்கள் பணம் தேவைக்கு ஆண்களை சார்ந்து இருந்தனர் உண்மை... இருப்பினும் அப்பொழுது பெண்களிடம் தான் சம்பாதிக்கும் பணத்தை கொடுத்து வைத்திருந்தனர்.... இப்பொழுது நம்மிடம் பணம் இருக்கிறது , வீடு இருக்கிறது, நிறைய புடவைகள் இருக்கின்றன ஆனால் எதையும் சரியாக அனுபவிக்க கூட முடியவில்லையே??? வருத்தமாய் இருக்கிறது...
உதரணத்திற்கு,,, அந்த காலத்தில் துணிமணிகள் கம்மிதான்... இருப்பினும் கல்யாணம், விசேஷங்கள் அதிகம்... உடுத்திய துணிகளையே திரும்ப திரும்ப போட்டுக்கொண்டாலும் நிறைவு இருந்தது... இன்றோ??? அலமாரியில் துணிகள் குவிந்துள்ளன நம்மால் அழகு செய்து பார்க்க நேரம் இருக்கிறதா?? கல்யாண முஹுர்த்தம் செல்ல முடிகிறதா.... இல்லையே??? ஏதோ போகவேண்டுமே என்று போகிறோம்.... எல்லாவற்றிலும் அவசரம்.
சாப்பாட்டை எடுத்துக்கொள்வோம்... என்றாவது ஒருநாள் நிறுத்தி நிதானமாய் உட்கார்ந்து ரசித்து ருசித்து சாப்பிட முடிகிறதா??? ஏதோ அள்ளி போட்டுக்கொள்கிறோம்...சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்வியே முன் வருகிறது ....இருப்பினும் சுயன்ருகொண்டுதான் இருக்கிறோம்...
எப்படி சரிசெய்வது??? முடியும் நம்மால் முடியும்...
நமக்காக என்று சில வேலைகளை, கொள்கைகள் வைத்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இன்றைய கால கட்டத்தில் இருக்கிறோம்...
நமக்கு பிடித்த பாடல்களை கேட்பது
நான் ரசனை என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்... அதில் கூறிய படி நாம் செய்யும் சிறு சிறு வேலைகள், அதை நாமே ரசிப்பது... வாசலில் கோலம், நம் சமையல், சிறு கைவினை பொருள்.....
நம்மை நாமே பாராட்டிக்கொள்வது .. இது மிகவும் அவசியம்...
நமக்காக சிறு நிமிடங்கள் ஒதுக்கி கொள்வது .. காபி நேரம் போல்.....
இவையே நாம் இன்பம் காண , கவலைகளை மறக்க உதவும்....
பெண்களே..... கடமைகளை செய்வோம் ஆனால் நமக்காகவும் வாழ்வோம்.....
மீண்டும் வருவேன்
திருமதி. மைதிலி ராம்ஜி