தூக்கமற்ற பொழுதுகளில் - அலைபாயுதே

http://adirainirubar.blogspot.ae/2015/10/blog-post_19.ஹ்த்ம்ல்
அதிரை நிருபர் தளத்தில் வெளியான எனது பதிவு
தூக்கமற்ற ஓரிரவு கற்றுத் தருகிறது அன்றாட பொழுதுகளில் நாம் கண்டு கொள்ளாமல் விடுகின்ற பல படிப்பினைகளையும். அந்த பொழுதுகளில் சும்மா இருப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. தூக்கம் தொலைத்த இரவினில் இமைகளை அகல விரித்து வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மின் விசிறியை பார்த்தேன்.

அது தனது நிழல்கூட சுவற்றில் விழாத வண்ணம் படுவேகமாக சுழன்று கொண்டிருந்தது எதற்காக இவ்வளவு வேகமும், முனைப்பும் காட்டுகிறது இந்த மின்விசிறி. மனிதர்களாகிய நாம் கண்ணயர்ந்து சுகமாக உறங்க வேண்டுமென்பதற்காகத் தானே. சில நிமிடங்களிலெல்லாம் படுக்கையை விட்டெழுந்து சார்ஜில் சொருகி வைக்கப்படிருந்த கைபேசியை எடுத்தேன். அது இரவென்றும் பாராமல் தன் உழைப்பை சீராகவே உள்ளே செலுத்தி கைபேசியில் அதற்கான உயிரோட்டத்தை நிறைவானது என்ற குறியீட்டுடன் காண்பிக்கவே செய்தது.

மணியோ 1:30, கைபேசியின் தொடுதிரையைத் தடவி முகநூல் பக்கத்தில் நுழைந்தேன். அங்கு நம்மைப் போன்றே வேறுயாரும் இருக்கிறார்களா என்றால் ஏமாற்றமே தெரிந்தவர்கள் யாரும் செயல்பாட்டில் இல்லை. ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துற எனும் கேள்வியும் எனக்குள் எழுந்தது, முகநூலிலிருந்து வெளியேறினேன்.

உண்மையில் இந்த கைபேசி தான் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆறரிவு மனிதனையும் தன்னகத்தே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.. நெட்பேக் எனும் பெயரில் நமது பணத்தை மட்டுமல்லாமல் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்னும் எத்தனையோ தனி செயழிகளை முன்னிலைப்படுத்தி நமது பொழுதுகளையும் விழுங்கி தனது ஆதிக்கத்தை செழிப்புடன் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது.

நானெல்லாம் சிறு வயதில் இருக்கும் போது பள்ளிக்கூடத்தில் நம்முடைய ஆளுமைகளை சோதிக்கும் வகையில் அசைன்மெண்ட் கொடுப்பாங்க. நானும் தாத்தாவை கூட்டிக்கொண்டு லைப்ரரிக்கு போய் தகவல்களை சேகரித்து இருக்கிறேன். இன்று என் பிள்ளைகளுக்கு லைப்ரரியை பற்றி நெட்ல 4 பக்கம் பிரிண்ட் எடுத்து வரவும்னு அசைன்மெண்ட் எழுதி கொடுத்திருக்காங்க. என்னவோ எல்லாமே இணைய மோகம்.

கூர்மையான கத்தியை வைத்து பழத்தையும் நறுக்கலாம், கையையுக் அறுக்கலாம், எல்லாம் அவரவர்கள் அதனை கையாளும் திறனில் இருக்கிறது. மெய்யாகவெ நான் இந்த கைபேசியிடம் அடிமைப்பட்டுப்பேனதற்கு அதனை நான் கையாளும் முறையே காரணம் என்று தோன்றியது.

வீட்டிற்குள்ளே நோட்டமிட்டு சலிப்படையவே மொட்டை மாடிக்கு சென்று அசுவாசப்படுத்திக்கொள்ள எண்ணி மொட்டை மாடிக்கு சென்றேன். மாடியில் ஒரு குட்டிச் சுவற்றின் மீது ஹாயாக அமர்ந்து கொண்டேன். சில்லென்ற குளிா்க்காற்று தேகத்தை தழுவி இதமளித்து சென்றது. நிச்சயமாக இந்த ஃபேன், ஏசி, ஏர்கூலர் எல்லாம் இந்த இயற்கையின் இதமான காற்றிடம் பிச்சை தான் வாங்கனும். அவ்வளவு இதமும் தூய்மையும் இந்த காற்றில் இருப்பதை உணர முடிந்தது.


மொட்டை மாடியின் ஒரு பகுதியை கரப்பான்களும் எறும்புகளும் ஆக்கிரமித்திருந்தன. ஆம் மகள் ஏதோ இனிப்பு பண்டத்தை அறைகுறையாக சாப்பிட்டு விட்டு சிதறிவிட்டிருக்கிறாள். அந்த இனிப்பை தான் அவை முகாமிட்டு வேட்டையாடிக்கொண்டும் மறுநாளைக்கென்று நள்ளிரவென்றும் பாராமல் சேகரித்துக் கொண்டுமிருந்தன.

அவற்றிடம் தான் கற்றுக்கொள்ள எத்தனை விசயங்கள்தான் இருக்கிறது, ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவரும் இனிப்பும் இரைந்து கிடக்கும் இதற துகளினை ஒவ்வொன்றும் தமது தலையிலேயே சுமந்த படி அணிவகுத்து சென்றன. அவைகளுடைய ஒற்றுமையும் உழைப்பும் உண்மையில் என்னிடமும் என்னைச் சார்ந்தவர்களிடமும் இல்லைதான். நான் ஆறரிவு மனிதெனென்ற அகந்தையோ என்னவோ. இருப்பினும் இந்த ஊர்ந்து செல்லும் உயிரியின் முன் சற்றே வெட்கித்தான் நின்றேன்.

ஹஸீனா அப்துல் பாசித்

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (22-Oct-15, 1:23 pm)
சேர்த்தது : ஹஸீனா பேகம்
பார்வை : 89

மேலே