பாண்டிய மன்னர்கள் சிறுவன்

சேர, சோழ நாட்டையெல்லாம் மல்யுத்த போட்டியில் வீழ்த்தியவன், இவனை மல்யுத்தத்தில் வெல்ல உலகிலேயே எவரும் இல்லை என்பார் போலெல்லாம் இவனது பெருமை,

இந்த மல்யுத்த வீரன் இப்பொழுது பாண்டிய மன்னரிடம் சவால் விடுத்துள்ளான்,

பாண்டிய மன்னருக்கோ பெரும் சோகம் இவனை வீழ்த்த எவருமே இல்லை என்று

அப்பொழுது தான் ஒரு சிறுவன் பாண்டிய மன்னரிடம் வந்து மல்யுத்த சவாலை நான் ஏற்கிறேன் அதற்குரிய ஏற்பாட்டை செய்யுங்கள் என்றான், மன்னருக்கோ ஒரே குழப்பம் இச்சிறுவனால் எவ்வாறு வெற்றி பெற இயலும் என்று, ஆனாலும் மன்னர் வேறு வழியில்லாமல் போட்டியை ஏற்பாடு செய்கிறார்,

போட்டி நடப்பதற்கு சிறு நேரமே இருந்தது மல்யுத்த வீரனோ இச்சிறுவன் என்ன செய்து விடப் போகிறான் என்று நினைத்து கொண்டு வயிறு முட்ட அருந்தியதால் உண்ட களைப்பில் சற்று கண் அசந்து உறங்கினான்

அப்பொழுது அந்த சிறுவன் இரு எறும்புகளை மல்யுத்த வீரனின் இரு காதினுள் விட்டான்,

போட்டி துவங்கியது மல்யுத்த வீரனால் காது குடைச்சலை தாங்க முடியவில்லை அவனது விரலோ காதில் நுழையாத அளவிற்கு தடிமனானது, எறும்புகள் கடிக்கும் கடியில் வலி தாங்காமல் குப்பற சாய்ந்து வீழ்ந்தே போனான் , சிறுவன் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டான், பாண்டிய மன்னருக்கே பெரும் மகிழ்ச்சி சிறுவனுக்கு ஆயிரம் பொற் காசுகளை அள்ளி தருகிறார்.

எழுதியவர் : விக்னேஷ் (25-Oct-15, 11:33 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 154

மேலே