ஒற்றை பார்வை-ஆனந்தி
![](https://eluthu.com/images/loading.gif)
உன் உல்லாச
பார்வைக்குள்
மயங்கி தவித்திடும்
நேரம் இவ்வேளையோ...!!
உன் ஒற்றை பார்வையில்
சின்னா பின்னாப் பட்டு
கிடக்கிறது என் மனம்...!!
மௌனத்தால் திகைத்து
உன் விழிகளுக்குள்
மூர்ச்சையாகிறேன்...!!
இதயத்தில் இடமில்லை
என்று சொல்லிவிட்டு
கண்களால் எனை வளைத்திட
காரணம் தான் என்னவோ...!!