உன்னதமான உறவு நீ
சொந்தத்துடன்
இனிமையாய்த்தான் போய்க்கொண்டிருந்தது பேச்சு...
அவரிடமிருந்து திடீரென்று விழுந்த ஒரு வன்சொல்..
எனது என்றோ ஒரு நாளையப்பேச்சை
லாவகமாய்க் குத்திக்காட்ட..
மனசுக்குள் ஆழமாய்த்தான் வலித்தது..
கண்ணீர் வரத் துடித்தது..
கண்ணோ காட்டிக்கொடுக்கத் தயாராக
கவசமாக சிரிப்பை அணிந்து கொண்ட என்னை
வசமாய் மாட்டிக் கொள்ள வைத்தது
தூரத்தில் நின்றிருந்த உன் கண்ணில் உதித்த ஒற்றை கண்ணீர்த்துளி
உன்னால் தான் நான்
எல்லா வலிகளையும் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...