மீப சோமசுந்தரம் MP Somasundaram

கவிஞர் திரு.எம்.பி .சோமசுந்தரம் நல்ல தமிழ் உணர்ச்சியும்,கலை உணர்ச்சியும் கவித்துவமும்
இவரிடத்தே உள்ளமை மகிழ்ந்து பாராட்டுதற்குரியது.வாழ்க்கை, இயற்கை ,மகளிர்,காதல் ,தமிழ்ப்பற்று ,பௌராணிக நிகழ்ச்சி முதலிய பொருள்கள் பற்றி கவிதைகள் படைத்து உள்ளார் .கவிஞர் சோமு பற்றி தமிழ் உலகம் நன்கு அறியும்.சிறுகதைப் போட்டியில் பாரதி தங்கப் பதக்கம் பரிசு பெற்று உள்ளார்.சிறந்த பாடல்களைப் பாடி பத்திரிகைகளில் வெளியிட்டு ,தமது அரிய கவித்திறனைப் புலப்படுத்தி இருக்கிறார்.திருச்சி வானொலி நிலையத்தில் உத்தியோகம் பண்ணிய போது சீரிய தொண்டுகள் பல ஆற்றியுள்ளார்.
திரு.T.K..சிதம்பர முதலியார் அவர்கள் திருக் குற்றாலம் நூலகத்தில் சோமு அவர்களின் திருக்குற்றாலப் பாட்டை இலக்கிய சபையில் அரங்கேற்றி உள்ளார். மேலும் T.K.C அவர்கள் தமது கைப்படவே அந்தப் பாடலுக்குப் பிரதி செய்து இலக்கிய அன்பர்களுக்கு அனுப்பி உள்ளார். சோமுவின் பாடல்களைப் பற்றி .T.K.C. அவர்கள் எழுதியிருந்த வாக்கியங்களில் ஒரு ஆவேசமே இருந்தது."தமிழ் மகளுக்கு ஒரு ஸ்ரீ தனம் "என்று பாரட்டி இருந்தார்கள் .சோமுவின் கவிதைகளில் முக்கியமாக நாம் காண்பது தமிழ்ப் பண்பாடோடு இசைந்த கவிஞரின் தனிமேதை,பொருட்செறிவு,
சொல்லின் இனிமையும் எளிமையும்,சொல்லும் விதத்திலும் ஒரு நூதனத் தெளிவு உண்டு.
அவரது பாடல்களில் எளிய சொற்களே உள்ளன.
ஆனால் எத்தனையோ ஆற்றல் வாய்ந்தன.இவற்றை இசையோடு,பொருள் உணர்ச்சியோடு நாம்
பாடும்போது , நமது ஊனையும் உயிரையும் உருக்கும் தன்மையதாய் இவ்வாற்றல் சிறந்து விளங்குகிறது.

எழுதியவர் : (25-Oct-15, 8:26 pm)
பார்வை : 42

மேலே