பார்வையின் மறுபக்கம்

..."" பார்வையின் மறுபக்கம் ""...

பார்க்கலாம் வாருங்கள்
பாருலகத்தின் எழிலை
கண்ணடைந்தும் காட்சியை
காணாதவற்கு விட்டுசென்று
மண் திண்ணும் உடம்புதானே
இறந்த பின்னும் உதவி விடு !!!

இயற்கை அழகினை ரசித்திட
இல்லையெனும் அவர் தம்
ஈன்றவளையவது பார்க்க
மலர்களின் மணங்களை
நுகர்ந்தே பழகியவனுக்கு
கண்டே மனம் மகிழட்டுமே !!!

தன் விழிகாண கண்ணீரின்
வருகின்ற வழி பார்த்தே
தடுக்கிவிழுந்த இடங்களை
தடவிப்பார்த்து தழும்புகளை
சின்னதாய் ஒரு புன்னகை
பூத்துவிட்டு போகட்டுமே !!!

தன்னலமில்ல பொதுநலமாய்
எண்ணிப்பார் இனியும் பார்
தானத்தில் சிறந்ததோ நிதானம்
ஆனந்தம் தரும் அன்னதானம்
பேராந்தம் தரும் இரத்ததானம்
உயிரின் உன்னதம் கண்தானம் !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Oct-15, 8:33 pm)
பார்வை : 120

மேலே