மருந்து
எழுந்து நடவாதீர்
தொடர் காட்சி
நீள் சினிமா முழு
நாள் விளையாட்டுகளில்
முழுகிடுவீர் இடையிடையே
இடுப்புத் தசை பெருக்க
ஊட்டிடுவீர் சிறு நொறுக்குகள்
அலுவலகத்திலும் அமர்நிலையில்
அசையாது அதிகாரம் செலுத்திடுவீர்
சிறு தொலைவு என்றாலும்
சிரமமின்றி வாகனத்தில்
சொகுசு கொஞ்சம் குறையாமல்
புகைமூட்டம் சுவாசித்தே....
கவலை ஒன்றும் வேண்டாம்
இன்றும் புதிதாய் மருந்தொன்று அறிமுகம்
நீரிழிவை நீக்க இயற்கை குணங்களுடன்
உடன் விளைவுகள் ஏதும் இல்லையாம்...
அரசின் நிறுவன ஆராய்ச்சியில் வெற்றி..
ஒன்றின் விலை ரூபாய் ஐந்தே...!
இயற்கை மருந்தென்றால்
இயன்றவரை என்றும்
இருக்கை தவிர்த்து
இரு கால்களில் பயணி....
---- முரளி