சீனபட்டாசை எதிர்த்து
மனிதர்களே,
மலிவான ஆபத்து வேண்டுமா?
இல்லை
தரமானவாழ்க்கை வேண்டுமா??
முடிவு எடுங்கள்!
பட்டாசு நம் சந்தோஷத்துக்காக
வெடிப்பது தன்றி
நம் சந்தோஷத்தை வெடிப்பதல்ல!
நம் சுதந்திரத்திற்க்காக பயன் அன்றி
நம் சுதந்திரத்தை பறிக்கல்ல!!
சீனாவை மனிதகணக்கில்
முறிக்க முடியவில்லை என்றாலும்
வாருங்கள்,
பட்டாசை கொளுத்தி சீனபட்டாசை
விரட்டி அடிப்போம்!!
உற்பத்தி இங்கு இல்லையா??
உழைப்பவர்கள் தான் பெருகவில்லையா??
தடைகளை வைத்தும் தாவி
வர துடிக்கிறது சில மிருகங்கள்!!
சிவாகசியின் நஷ்டங்கள்
பொருளாதாரத்தின் சருகுகள்!
எனக்கோர் சந்தேகம்.,
பயங்கர வேதிப்பொருளின்
விளைவுகள் அவர்கள்அறியவில்லையா?
இல்லை
அறிந்தும் செலவு குறைவு என்பதால் வெடிகளுள் திணிக்கிறார்களா???
பட்டாசுகள் தீபாவளிக்கு மட்டுமல்ல
அவை,
வெற்றிக்கு முழங்கும்.
கட்சிகார்களின் வருகைக்கு வெடிக்கும்.
சாதனைக்கு ஜொலிக்கும்.
காசுக்கு கனக்கும்!!
வாருங்கள் மனிதர்களே,
சீனபட்டாசைக்கு எதிராக
குரல் கொடுப்போம்.
கேட்கவில்லையனில்
அவர்கள் பட்டாசை கொளுத்தி
அவர்களை விரட்டி அடிப்போம்!
மலிவான ஆபத்து வேண்டுமா?
இல்லை
தரமானவாழ்க்கை வேண்டுமா??
முடிவு எடுங்கள்!