சாப்பிட்டுத் தூங்குங்கள்

சாப்பிட்டுத் தூங்குங்கள்

சட்டென்று விழுந்த மழையும்
சட்டென்று நின்ற மழையும்
ஏச்சுக்கு ஆளாகிறது.

ஏச்சும் பேச்சும் இல்லாமல்
மனிதனால்
இருக்க முடிகிறதா ? என்ன ?

போக்கும் நோக்கும்
புரிந்தவன், புரியாதவன்
கலந்து கட்டி வாழவேண்டியுள்ளது.

நாய், பன்றியின்
நடமாட்டத்தை என்ன ?
கொசுவையே ஒழிக்க
முடியவில்லை.

எல்லாம் ஒருநாள்
சரியாகி விடுமென்று
சாமியை கும்பிட்டுவிட்டு
சாப்பிட்டுத் தூங்குங்கள்.
விடிந்து விடும்.

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 1:47 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 166

மேலே