உச்ச கட்டம்
நெடிய மரமும்
ஒடிந்து விழுவதும்
ஒழிந்தே போவதும்
வீசும் புயலில்
மிக மிக சாதாரணம்
வீழ்கின்ற துளிகள் எல்லாம்
தழைக்கின்ற இலையாகையில்
வளர்ந்திடும் மரமும்.
துயரக் கடலில்
மூழ்கி அழிவதும்
ஆறுதல் வார்த்தைகள்
அள்ளி வீசும்
அடுத்தவர் தயவில்
கரை சேர்வதும்
துணிந்தே கடலில்
எதிர் நீச்சல் போடுவதும்
ஒவ்வொரு மனிதனின்
தன்னம்பிக்கையின்
உச்சக்கட்டம்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
