என்னை ஜடமாகி விடு ...

ஓர் நாள் என் வாழ்வில்
கடவுள் அனுப்பிய
தூதன் போல் வந்தாய்
துன்பத்தை மட்டுமே
அனுபவித்த எனக்கு
அன்பை மட்டுமே
தந்தாய்....

என்னை விட்டு நீங்கிய
என் தந்தை தாயின் அன்பு
எல்லாத்தையும் உன்
ஒருவனிடம் பெற்றுக்கொண்டேன்
வாழ்க்கையே வசந்தமாய்
இருந்தது ......

விதி எங்கே விட்டது
பிரிந்தோம் ..பொய்யான
காதலால் என்னை பாசமுள்ளவள்
ஆக்கி உன்மீது உயிராய்
இருக்க வைத்து வார்த்தையால்
கொள்கிறாயே ....

ஏனடா என் வாழ்வில்
வந்தாய் உன்னாலே
நான் உயிர் வாழவா ?
இல்லை உன்னாலே
தினம் தினம் சாகவா ?
சொல் என் உள்ளம்
வலியால் துடிக்கிறது
ஜடத்துக்கு நீதானே
உயிர் கொடுத்தாய்
வலிக்குதடா மீண்டும்
என்னை ஜடமாகி
விடு ......
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:10 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 308

மேலே