கருந்துளையானாலும் சூரியன்

வானில் உயர்ந்து நின்று
திசை எங்கும் ஒளிபரப்பி
வையகத்தை வாழவைத்த
சூரியர்கள் ...
காலநிலை மாற்றத்தால்
ஒளியிழந்து போனாலும்
அறிவியலும் அறியாத அதிசயமாய்
அடி முடியே தெரியாத அற்புதமாய்
அவை என்றும் கருந்துளையாய்
வானுயர வாழ்ந்திருக்கும்
கருந்துளையே ஆனாலும் சூரியரே

எழுதியவர் : மோகன் சபாபதி (26-Oct-15, 9:51 pm)
சேர்த்தது : Mohan Sabapathy
பார்வை : 67

மேலே