தற்கொலை

ஒரு மாலைநேரம்
நெடுஞ்சாலையோரம்
எதிர்பாராமல் சந்தித்தேன்..!
என்னவளை...,
பார்த்த மாத்திரத்தில் பரவசம்..
அவள் பார்வை
என்னில் பட்ட,
அந்த நொடிப்பொழுதில்,
என் மேனியெங்கும்
மின்சாரம் பாய்வதாய் உணர்ந்தேன்..!
அலங்காரம் செய்யப்பட்ட
நிலவென அவளைக் கண்டவுடன்..,
உதட்டோரம் ஒரு புன்சிரிப்பு,
விழியோரம் சில நீர்த்துளி,
மனதோடு ஒரு மௌனராகம்-என
முட்டிமோதி முன்னிக்கு வந்த
என் உணர்வுகள் அனைத்தும்,
ஒரே நொடியில்
தற்கொலை செய்துகொண்டன..!!
ஏனெனில்..
என் காதலி கைகோர்த்து வந்திருந்தால்,
அவள் புது கணவனுடன்...!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (26-Oct-15, 8:50 pm)
Tanglish : tharkolai
பார்வை : 83

மேலே