எனக்கும் ஆசைதான்
எனக்கும் ஆசைதான்...,
உன் உள்ளங்கைகளினுள்
உறைந்திடவும்..
உன் விரலோடு விளையாடி
என் வாழ்வைக் கழித்திடவும்..
எனக்கும் ஆசைதான்..!
ஆனால்..,
உன்னுடனான எனது நாட்கள்
நிலையில்லை என
தெரிந்திருந்தும்...,
உனக்கேன் என்மீது
இவ்வளவு ஆசை...???
- மருதாணி