நண்பனுக்கு வாழ்த்து

மாலை நேரத்து பொன்வண்ணம் முதலில் இளஞ்சிவப்பு பட்டாடை போர்த்தி
மேகங்களூடே கார்முகில்வண்ணன் பூமாரி பொழிந்து பன்னீர் தூவி
உன் பெருமையைக் கண்டு செருக்குற்ற இடிகள் மத்தளம் என முழங்கி
உன்னுடன் சுயபுகைப்படம் (செல்பி) எடுக்க மின்னல் வெட்டொளிகளை (flash) வீசி ஆர்பரித்து

விண்வெளி ஆராய்ச்சியில் இணையச் செல்லும் என் நண்பனே
உன்னை வாழ்த்த வந்த இயற்கையின் அவாவினைக் கண்டாயா
சமீபத்தில் காலஞ்சென்ற கலாம் அய்யாவைப் போல் நீயும்
விண்ணுயர் புகழ் பெற என் வாழ்த்துக்கள்!!! சாதனைகள் தொடரட்டும்!!!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (27-Oct-15, 6:39 am)
Tanglish : nanbanukku vaazthu
பார்வை : 256

மேலே