உனக்கு தெரியாது

உன்னை விட
உன் நினைவுகளை அதிகம் சுமப்பது
நான்தான்

மற்றவர்களை விட
உன் பெயரை அதிகம் உச்சரிப்பது
நான்தான்

உன் பெற்றோரை விட
உன்மீது அதிகம் அக்கறை காட்டுவது
நான்தான்

உன் நிழலை விட
உன்னை அதிகம் பின் தொடர்வது
நான்தான்

உன்னை விட உன்னை
அதிகம் நேசிப்பதும்
நான்தான்

எழுதியவர் : கவி (6-Jun-11, 12:43 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : unaku theriyaadhu
பார்வை : 331

மேலே